ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஏப்ரல் 22 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தோல்வியின் மூலம் கற்றுக்கொண்ட பாடத்தை அரசாங்கம் மறந்தால், இன்னமும் இழப்புகளைச் சந்திக்க வேண்டி வருமென, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்தோடு, ஜனநாயக விழுமியங்களுக்கு அரசாங்கம் மதிப்பளித்து, மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடாத்த வேண்டும் எனவும், இன்று (22) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் அவர் கோரியுள்ளார்.
மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட அவர், அவை ஒருபக்கமாகவிருக்க, ஏற்கெனவே இருந்து வந்த ஜனநாயக முறைமைகள் கூட மங்கிமறையும் அளவுக்குச் செயற்பாடுகள் இடம்பெற்றன என விமர்சித்தார்.
“உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்து வந்து, இறுதியில் மக்களின் அதிகரித்த வற்புறுத்தலின் பேரில், தேர்தல் நடாத்தப்பட்டது.
“மக்களின் தீர்ப்புக்கும் ஜனநாயகப் பண்புகளுக்கு மதிப்பளிக்காது நடந்து கொண்டால், மக்கள் என்ன பிரதிபலிப்பை வெளியிடுவார்கள் என்பதை, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள், அரசாங்கத்துக்குத் தெளிவாக உணர்த்தியுள்ளன.
“கற்றுக் கொண்ட இந்தப் பாடத்தை மறந்து விட்டு, உள்ளூராட்சிமன்றத் தேர்தலை இழுத்தடித்ததைப் போன்று, மாகாண சபைத் தேர்தலையும் அரசாங்கம் பிற்போட நினைத்தால், மக்கள் அதற்கும் தக்க பதிலடி கொடுப்பார்கள்" என்று அவர் எச்சரித்தார்.
ஆகவே, அத்தகைய சூழலுக்கு மக்களைத் தள்ளாமலிருக்க, பழைய முறையில், மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்த வேண்டுமென, அவர் கோரியுள்ளார்.
17 minute ago
25 minute ago
28 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
25 minute ago
28 minute ago
30 minute ago