2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

உள்ளுராட்சிமன்றத் தேர்தல்: பெண்களின் பங்களிப்பை வலுப்படுத்தும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 22 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

உள்ளூராட்சிமன்றத்; தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக உள்ளூராட்சி மட்டத்தில் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்படும் பெண்களுக்கான 25 சதவீத ஒதுக்கீடு தொடர்பாக  விழிப்புணர்வூட்டும் நிகழ்வு மற்றும் மாவட்ட ரீதியிலான வேலைத்திட்டம் மட்டக்களப்பு நகரில்  எதிர்வரும் 25ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது.

உள்ளூராட்சி அரசியல் செயற்பாடுகளில் பெண்களின் பங்களிப்பை வலுப்படுத்துதல் என்ற திட்டத்தில் பிரசாரம் மேற்கொள்ளுதல், கையொப்பம் பெற்றுக்கொள்ளல் என்பனவும் நடைபெறும் என  மேற்படி திட்டத்தின் இணைப்பாளர்; வி.இராமேஸ் ஆனந்தன் தெரிவித்தார்.  

மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட 'உள்ளூராட்சி அரசியல் செயற்பாடுகளில் பெண்களின் பங்களிப்பை வலுப்பபடுத்துதல்' தொடர்பான செயற்றிட்டத்தின் மாவட்ட ரீதியிலான கருத்தரங்குகள் கடந்த வருடத்தில் நடத்தப்பட்டிருந்தன.

இந்த நடவடிக்கையின் அடுத்த கட்டமாக அமைவது குறிப்பிட்ட மாவட்டங்களின் பிரதான நகரங்களில் மக்களை விழிப்புணர்வூட்டுவதற்கான பிரசார நிகழ்வாகும் எனவும் அவர் கூறினார்.     

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X