எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 ஓகஸ்ட் 29 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடியில், ஊடகவியலாளர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபர், 50,000 ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில், நேற்று (28) விடுவிக்கப்பட்டார்.
பிராந்திய ஊடகவியலாளரும் காத்தான்குடி மீடியா போரத்தின் செயலாளருமான எம்.எஸ்.முஹகம்மட் சஜியின் வீட்டுக்குள், ஞாயிற்றுக்கிழமை (26) நுழைந்த ஒருவர், அவருக்குக் கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. அலைபேசி மூலமாகவும், இந்த அச்சுறுத்தலை அவர் விடுத்திருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, குறித்த சந்தேகநபர், நேற்று முன்தினம் (27) கைது செய்யப்பட்டிருந்தார்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025