ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 மே 14 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்தால் அண்மையில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள்களுக்கான விலையை உடனடியாகக் குறைக்குமாறு கோரும் சுவரொட்டிகள், மட்டக்களப்பு மாவட்ட நகர பிரதேசங்கள், கிராமப் புறங்கள் எங்கும், இன்று (14) அதிகாலை முதல் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.
மக்கள் விடுதலை முன்னணி என்று உரிமை கோரப்பட்டுள்ள அந்தப் பிரசுரத்தில், “எரிபொருள்களுக்காக அநீதியான முறையில் உயர்த்தப்பட்ட விலையை உடனடியாகக் குறைத்து விடு” என்று அரசாங்கத்தைக் கோரும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஜனாதிபதி கையை உயர்த்தி மக்களுக்கு சுபசோபனம் கூறும் மட்டக்களப்பு மேதின அழைப்பு சுவரொட்டிகளின் கீழேயும் மேலேயும், இந்தச்சுவெரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை, மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025