2025 மே 08, வியாழக்கிழமை

ஏறாவூரில் ஆடை செயலாக்கப் பூங்கா

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூரில் ஆடைச் செயலாக்க பூங்கா ஒன்றை அமைக்கும் முயற்சியில் இலங்கை கூட்டு ஆடை தொழில்துறைச் சங்கம் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இத்திட்டத்துக்கு, சீனா உள்ளிட்ட முக்கிய நாடுகளில் இருந்து முதலீடுகளை மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஆடைத் தொழில்துறைத் தயாரிப்பிற்கான செலவீனங்களை குறைப்பதே இதன் நோக்கமாகுமென்றும், திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை கூட்டு ஆடை தொழில்துறை சங்கம், இது தொடர்பான முன் ஏற்பாடுகளை, இலங்கை முதலீட்டுச் சபையுடன் மேற்கொண்டு வருகின்றது.

ஏறாவூரில் தொழில்பேட்டை வலயத்தை அமைப்பதற்காக 200 ஏக்கர் காணியை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, இலங்கை ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் றிஹான் லக்கானி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெளிநாட்டு ஆடைத் தயாரிப்பாளர் நிறுவனங்களையும் இந்த வலயத்தில் தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X