Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 24, சனிக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 ஓகஸ்ட் 09 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய நிர்வாகத் தெரிவுக்காக அதன் ஆளுகைக் காலம் முடிவடைந்த நிலையில், ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், திங்கட்கிழமை இரவு கலைக்கப்பட்டுள்ளதாக, நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த சம்மேளனம், கடந்த மூன்று வருடமாக செயற்பாட்டிலிருந்து வந்துள்ளது.
திங்கட்கிழமை ஏறாவூர் நஜ்முல் உலூம் அறபிக் கல்லூரியில் இடம்பெற்ற பொதுச் சபைக் கூட்டத்தில் பொதுச்சபை, புதிய யாப்புத் திருத்தங்களை ஏகமானதாக ஏற்றுக்கொண்டதன் பின்னர் பழைய நிர்வாகம் கலைக்கப்பட்டுள்ளளது.
புதிய சம்மேளனத்துக்கு 61 நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளார்கள்.
புதிய தீர்மானத்துக்கேற்ப புதிய பொதுச்சபைக்கான நிர்வாகத் தெரிவு கட்டங்கட்டமாக பள்ளிவாசல்கள், பாடசாலைகள், சங்கங்கள், கழகங்கள், சமூக நிறுவனங்கள் என்பனவற்றில் நடைபெற்று முடிந்தவுடன், செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் சம்மேளனத்துக்கான புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெறவுள்ளதாகவும் அச்சம்மேளனம் அறிவித்துள்ளது.
புதிய பொதுச் சபையில் தலைவர், உப தலைவர்கள், செயலாளர், உப செயலாளர்கள் பொருளாளர், மற்றும் நிர்வாகக் குழு என்பனவற்றுக்கு அலுவலர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
9 hours ago
23 May 2025