Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 மே 01 , பி.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில், கடந்த ஒரு மாத காலப்பபகுதியில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என மொத்தம் 79 பேர், டெங்குத் தாக்கத்துக்கு ஆளாகி சிகிச்சை பெற்றிருந்தனரென, சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார்.
டெங்கு உற்பத்தியாகக் கூடிய சாத்தியப்பாடான இடங்களைத் தேடி மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஏறாவூர் பொலிஸ் நிலையக் கட்டடம், பொலிஸார் தங்கும் விடுதிகள், வாகனங்கள் மற்றும் படகு தோணிகள் நிறுத்துமிடங்கள், ஏறாவூர் தனியார் கூட்டுறவு வைத்தியசாலை உள்ளிட்ட ஏறாவூரின் பல முக்கிய இடங்கள், இன்று (01) சோதிக்கப்பட்டன.
இதன்போது டெங்கைப் பரப்பக்கூடிய நுளம்புக் குடம்பிகள் உற்பத்தியாகிப் பெருகக் கூடிய சாத்தியப்பாடான பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அவை சுத்தம் செய்யப்பட்டன எனவும், சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இவ்வாண்டின் ஆரம்பத்திலிருந்து இதுவரை ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் டெங்குத் தாக்கத்துக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஏறாவூர் சுகாதார அதிகாரி தலைமையிலான டெங்குப் சோதனை நடவடிக்கையில், பிரதேச மேற்பார்வை சிரேஷ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் சுகாதாரத்துறை அலுவலர்களும் இடம்பெற்றிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago
2 hours ago