Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஒக்டோபர் 16 , பி.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, ஏறாவூர் வாவிக் கரையினூடாக, காட்டு யானைகள் கூட்டம், ஏறாவூர் நகருக்குள் பிரவேசிக்க முற்பட்டு வருவதால், கடந்த சில தினங்களாக ஏறாவூர் வாவிக் கரையோரத்தில் வசிக்கும் மக்களிடையே அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.
ஏறாவூர் வாவிக் கரையை அண்டியே சிறுவர் பூங்கா, பாடசாலை, விளையாட்டு மைதானம், கலாசார மண்டபம், சமூக சேவைகள் அலுவலகம், பிரதேச செயலகம், மூத்தோர் பொழுதுபோக்குப் பூங்கா, பள்ளிவாசல்கள், பொதுமக்களின் வீடுகள் உள்ளிட்டவை அமைந்துள்ளன.
முதன்முறையாக, கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில், வாவியைக் கடந்து கரையோரப் பிரதேசத்துக்குள் 6 யானைகளைக் கொண்ட காட்டு யானைகள் கூட்டம் ஊடுருவியதெனவும், பகல்பொழுதானபடியால், பெரும் எண்ணிக்கையில் ஆட்கள் கூடி, அந்த யானைகளை விரட்டியடித்ததாகவும், ஏறாவூர் நகர சபைத் தவிசாளர் இறம்ழான் அப்துல் வாஸித் தெரிவித்தார்.
அவ்வேளையில், காட்டு யானைகள் கூட்டத்தை விட்டுத் தனியே அகன்று சென்ற ஒரு யானை, மூர்க்கத்துடன் பிரதேச செயலக வீதியில் முன்னேறி, அவ்வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளைத் தும்பிக்கையால் சுழற்றியடித்து வீசி எறிந்ததெனவும், சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஏறாவூர் வாவியை அண்டிய கரையோரமெங்கிலும் வசிக்கும் பொதுமக்கள், தினமும் இரவு நேரங்களில் மிகுந்த அச்சத்துடன் காலங்கழிக்கின்றனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.
8 hours ago
9 hours ago
29 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
29 Aug 2025