2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஏறாவூர் நகர சபை உறுப்பினருக்கு பிணை

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 18 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஏறாவூர் நகர சபை பிரதித் தலைவரைத் தாக்கியதான முறைப்பாட்டில் கைதுசெய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர், ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

நகர சபையின் உறுப்பினர் முஹம்மத் சுல்தான் முஹம்மத் றியாழ் தன்னைத் தாக்கியதாக, ஏறாவூர் நகர சபையின் பிரதித் தலைவர் மீராலெப்பை ரெபுபாசம், ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததன் அடிப்படையில் சந்தேகநபர், நேற்று (17) கைதுசெய்யப்பட்டு, மாவட்ட பதில் நீதவான் வி.தியாகேஸ்வரன் முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, சந்தேகநபரை ஒரு இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் விடுவித்த நீதவான், அடுத்த வழக்கை, நவம்பர் மாதம் 20ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

ஏறாவூர் நகர சபையின் விசேட அமர்வும் வரவு - செலவுத் திட்ட சமர்ப்பிப்பும் கடந்த திங்கட்கிழமை (12) ஏறாவூர் நகர சபை, சபா மண்டபத்தில் நடைபெற்று, சபையின் வாக்கெடுப்பு முடிவடைந்து கூட்டம் நிறைவுற்றதின் பின்னர் பட்ஜெட் தோற்கடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சபை அங்கத்தவர்களிடையே சலசலப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X