2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பரிசோதனை

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் வருடாந்தப் பொலிஸ் பரிசோதனை, ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும்  சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் முன்னிலையில், ஏறாவூர் பொலிஸ் முன்னரங்கு வளவில், இன்றுக் காலை நடைம்பெற்றது.

மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர், சமன் யட்டவர பொலிஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டதுடன், பொலிஸாரிடம் பரிசோதனைகளையும் மேற்கொண்டார்.

இதன்போது, பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்கள், துப்பாக்கிகள் என்பவற்றின் தராதரம் பரிசீலிக்கப்பட்டதுடன், பொலிஸாரின் ஆளுமைத் தோற்றம், ஆரோக்கியம் உட்பட அவர்களது சேம நலன்களும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும்  சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் உட்பட இன்னும் பல பொலிஸ் அதிகாரிகள், இந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வுகளில் ஈடுபட்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .