Suganthini Ratnam / 2017 ஜனவரி 06 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டு வருடகால பூர்த்தியையிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளிலும் விசேட நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளன.
அந்த வகையில், ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலையால் மக்கள் நல நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு;ள்ளன. நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை ஏறாவூர்ப் பிரதான வீதியிலுள்ள கூட்டுறவு வைத்தியசாலைக் கட்டடத்தில் நடைபெறுமென பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளர் எம்எல் அப்துல் லத்தீப் தெரிவித்தார்.
குழந்தைப் பேறின்மை உடையவர்களுக்கு இலவச விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடாத்தப்படவுள்ளது. இந்தியா ஜீபிஆர் கிளினிக் கருத்தரிப்பு மையத்தின் சிறப்பு மருத்துவர் ஜி.புவனேஸ்வரி இங்கு ஆலோசனை வழங்கவுள்ளார் எனவும் அவர் கூறினார்.
டெஸ்ட் டியூப் பேபி, கருமுட்டை விந்து தானம், லேப்ரோஸ்கோபி, ஹிஸ்டிரோஸ்கோபி, கருக்குழாய் அடைப்பு நீக்குதல், கர்ப்பப்பை கட்டிகள் நீக்குதல், பாலியல் சம்பந்தமான குறைகள் மற்றும் ஆண் மலட்டுத்தன்மை போன்ற விடயங்களில் ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன.
24 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago
3 hours ago