Thipaan / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஹிதாயத் நகரிலுள்ள காணியொன்றிலிருந்து கைக்குண்டுகள் இரண்டை, இன்று செவ்வாய்க்கிழமை (11) மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹிதாயத் நகரிலுள்ள செய்யது இப்றாஹிம் ஹமிர் முஹம்மத் என்பவரின் காணியிலிருந்தே இந்தக் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
காணி உரிமையாளர், தனது காணியைத் துப்பரவு செய்து வேலி அமைத்துக் கொண்டிருந்த போது, இந்தக் குண்டுகள் மண்ணுக்குள் தென்பட்டுள்ளன. இது தொடர்பில் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
உடனடியாக ஸ்தலத்துக்;கு விரைந்த புலனாய்வாளர்களும் பொலிஸாரும், கைக்குண்டுகளை மீட்டு அதனைச் செயலிழக்கச் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது யுத்தம் இடம்பெற்ற காலத்தில் புழக்கத்தில் இருந்த கையெறி குண்டுகள் வகையைச் சேர்ந்தவை எனத் தெரிவித்த பொலிஸார், இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருசதாகத் தெரிவித்தனர்.
2 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
9 hours ago