Princiya Dixci / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு - ஏறாவூர் ஓடாவியார் வீதியிலுள்ள அவரது வீட்டில் இருந்த போது காணாமல் போன எஸ்.எச். சுபைர் ஹிக்மத் எனும் 11 வயதுடைய பாடசாலைச் சிறுவன், கிரிபத்கொடை பொலிஸாரால் மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
ஏறாவூர் றஹுமானியா வித்தியாலயத்தில் 7ஆம் தரத்தில் கல்வி கற்கும் இச்சிறுவன் கடைசியாக ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி வரையிலும் ஏறாவூர் ஓடாவியார் வீதியிலுள்ள அவரது வீட்டில் காணப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் சிறுவன் காணாமல் போயுள்ளார். இரவாகியும் சிறுவனின் நடமாட்டம் வீட்டில் இல்லாது போகவே உறவினர்கள் தேட ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, கிரிபத்கொடை பொலிஸ் பிரிவில் சிறுவனொருவன் அநாதரவாகக் காணப்பட்ட நிலையில் நேற்று திங்கட்கிழமை (14) பகல் மீட்கப்பட்டுள்ளான்.
அச்சிறுவன் கொடுத்த தகவல் மற்றும் தொலைபேசி விவரங்களின் அடிப்படையில் கிரிபத்கொடைப் பொலிஸார், உறவினர்களுடன் தொடர்புகொண்டு பெற்றோரை வரவழைத்து சிறுவனை ஒப்படைத்துள்ளனர்.
சிறுவன், திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் கிரிபத்கொடையிலிருந்து பெற்றோரால் ஏறாவூருக்கு அழைத்து வரப்பட்டுள்ளான்.
இச்சம்பவம் தொடர்பாக சிறுவனிடம் எந்த விவரங்களையும் பெற முடியாதிருப்பதாகவும் சிறுவன் மௌனமாகவே இருப்பதாகவும் சிறுவனின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இது பற்றி கிரிபத்கொடை மற்றும் ஏறாவூர் பொலிஸார் இணைந்து விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025