Suganthini Ratnam / 2017 ஜனவரி 23 , மு.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
ஏறாவூரில் ஜாமியா நிழாமிய்யா அறபுக் கல்லூரி என்ற பெயரில் புதிய அரபுக் கல்லூரி திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (22) இடம்பெற்றது.
சிங்கப்பூர் நாட்டில் வசிக்கும் கொடை வள்ளலான முஹைதீன் பின் அப்துல் காதிரின் சுமார் 2 கோடி ரூபாய் செலவிலான நன்கொடை மூலம் நிர்மாணிக்கப்பட்ட இந்த அரபுக் கல்லூரியில் சுமார் 50 மாணவர்கள் ஒரே காலப்பகுதியில் தங்கியிருந்து சன்மார்க்கக் கல்வியைக் கற்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரிலிருந்து வருகை தந்திருந்த கொடை வள்ளலான முஹைதீன் பின் அப்துல் காதிர் அரபுக் கல்லூரியின் புதிய கட்டடத் திறப்பு விழா, மலர் வெளியீடு மற்றும் மத்ரசா மாணவர்களுக்குத் தலைப்பாகை சூட்டுதல் ஆகிய நிகழ்வுகளில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் சிங்கப்பூரிலிருந்து வருகை தந்திருந்த மார்க்க அறிஞர்களும் உள்ளுர் மார்க்க அறிஞர்களும் மத்ரஸா மாணவர்கள் மற்றும் பெற்றோரும் பங்கு பற்றினர்.
24 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago
3 hours ago