Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட ஐயங்கேணி பொதுமயான வீதி உலக வங்கியின் நெல்சிப் திட்டத்தின் 5.5 மில்லியன் ரூபாய் நிதியில் கொங்கிறீட் வீதியாக புனரமைக்கப்படவுள்ளதாக அப்பிரதேச சபைச் செயலாளர் திருமதி குமுதா ஜோன்பிள்ளே தெரிவித்தார்.
மேலும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட 19 கிராமிய வீதிகள் சுமார் 15 இலட்சம் ரூபாய் செலவில் கிறவல் இட்டு செப்பனிடும் வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான வீதிகளின் புனரமைப்பு வேலைகள் முடிவந்துள்ளன. மழை வெள்ளம் காரணமாக சில வீதிகளின் புனரமைப்பு வேலைகள் தடைப்பட்டுள்ளன.
களுவன்கேணி பொது விளையாட்டு மைதானத்தைச் செப்பனிடும் வேலையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025