Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித் கனகராசா சரவணன்
ஜனாதிபதி விருது பெற்ற சாரணியரும் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் மாணவனான அமலநாதன் சஞ்சீவன், ஐரோப்பாவின் உயரமான மலையான ரஷ்யாவிலுள்ள எல்ப்ரஸ் மலை ஏறுவதற்காகப் பயணமானார்.
எல்ப்ரஸ் மலையில் ஏறி அதன் உச்சியில் உலக சாரணக் கொடி, மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் கொடியையும் இவர் பறக்கவிடவுள்ளார்.
இவருடைய இந்த மலையேறும் பயணத்தை, மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர் விவேகானந்த பிரதீபன், உதவி மாவட்ட சாரண ஆணையார் (நிர்வாகம்) ஐ.கிரிஷ்றி ஆகியோர், உலக சாரணிக் கொடியை வழங்கி ஆரம்பித்துவைத்தனர்.
5642 மீற்றர் உயரமான இந்த மலையை, வருடத்துக்கு 15 – 20 ஆயிரம் பேர் ஏறிவருகின்றனர். இலங்கையர்களும் பலர் ஏறிள்ள போதும், கிழக்கு மாகாணத்திலிருந்து செல்லும் முதலாவது நபர் இவர் ஆவர்.
இவர், கடந்த சிலவாரங்களுக்கு முன்னர் நல்லெண்ண நோக்கமாக பருதித்தித்துறையிலிருந்து மாத்தறை வரை நடைப்பயணம் ஒன்றையும் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
6 hours ago
6 hours ago