2025 ஜூலை 19, சனிக்கிழமை

ஐ.தே.க மட்டு. அமைப்பாளர் கட்சியில் இருந்து விலகல்

Editorial   / 2020 ஜூன் 16 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் வே.மகேஸ்வரன், தனது சுயவிருப்பம் காரணமாக, கட்சியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார்.

மட்டக்களப்பு, கல்லடியிலுள்ள அவரது வீட்டில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு அறிவித்தார்.

இந்தப் பதவி விலகலை, கட்சியின் செயலாளருக்கு கடிதம் மூலம் அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பல முரண்பாடுகள் இருப்பதால், அதில்  தொடர்ந்தும் செயற்பட முடியாதிருப்பதால், மேற்படி பதவியிலிருந்து விலகிக்கொள்வதாகத் தெரிவித்தார்.  

அதேவேளை, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில்  எந்தவொரு கட்சிக்கும் தான் ஆதரவு வழங்கப் போவதில்லை என்பதுடன், எந்தவோர் அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடபோவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X