2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஒரு சமூகத்தை ஓரங்கட்டி விட்டு ‘இன்னொரு சமூகத்தை கட்டியெழுப்ப முடியாது’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 மே 22 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு சமூகத்தை ஓரங்கட்டி விட்டு, இன்னொரு சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியாது என, தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா இன்று (22) தெரிவித்தார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், அரசாங்கத்தின் சேவைகளை அனைவரும் சமமாகப் பெற வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார்.

“நல்லிணக்கம் எனும் அடிப்படையில், அரசாங்கத்தின் சேவைகளை அனைவரும் சமத்துவமாகவும் சமனாகவும் அடையக்கூடிய வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பதோடு, ஒரு சமூகத்தை ஓரங்கட்டி விட்டு, இன்னொரு சமூகத்தை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது" என்று குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில், சமத்துவமற்ற இந்த நிலையால் தான், நாட்டில் பிரச்சினைகள் தோற்றம் பெற்றன எனக் குறிப்பிட்ட பிரதியமைச்சர், ஆகவே, எங்கும் சமத்துவம் பேணப்படல் வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

நாட்டில், மும்மொழிகளிலும் அரச கருமங்கள் ஆற்றப்பட வேண்டும் என்று, 25க்கும் மேற்பட்ட சுற்றுநிருபங்கள், அரச திணைக்களங்களுக்கு இதுவரை அனுப்பிவைக்கப்பட்டன எனத் தெரிவித்த அவர், திணைக்களங்கள் ஊடாக மொழி அமுலாக்களை நடைமுறைப்படுத்துவதற்காக, விசேட சுற்றறிக்கையும் வழங்கப்பட்டது என்பதையும் ஞாபகப்படுத்தினார். ஆனால் இவற்றுக்கு மத்தியில், மும்மொழிப் பண்பை நடைமுறைப்படுத்துவதில் சிரமங்கள் காணப்படுகின்றன என்பதை அவர் ஏற்றுக் கொண்டார்.

“மும்மொழி அமுலாக்கத்தை வினைத்திறன் மிக்கதாக்கும் பொருட்டு, பல்வேறு முயற்சிகளை அமைச்சு முன்னெடுத்து வருகிறது” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X