2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ஒரு மாதமாகியும் வீடு திரும்பாத மீனவர்கள்

Freelancer   / 2022 ஒக்டோபர் 19 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீன்பிடிக்க ஆழ்கடலுக்குச் சென்ற வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை என்று துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி மீன்பிடிக்க ஆழ்கடலுக்குச் சென்ற தந்தை, மகன், மருமகன் உட்பட நான்கு மீனவர்களுமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக மீனவர்களின் உறவினர்கள் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஏழு நாட்கள் பயணம் செய்து மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்களும் 32 நாட்கள் கடந்தும் இதுவரைக்கும் வீடு திரும்பவில்லை என்று துறைமுக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

இவ்வாறு காணாமல் போயுள்ள மீனவர்களை தேடும் பணிகளை கடற்படையினர் மற்றும் மீனவர்கள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X