2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஒரு முட்டைக்கு ரூ. 1 இலட்சம் அபராதம்

Editorial   / 2022 நவம்பர் 28 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

 


மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கட்டுப்பாட்டு விலையை மீறி 60 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்த வர்த்தகரை ஒரு இலட்சம் ரூபாயைஅபதாரமாக செலுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர்போல்,   உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட நுகர்வேர் அதிகாரசபை உதவி பணிப்பாளர்  ஆர்.எப்.அன்வர் சதாத் தலைமையிலான குழுவினர் சம்பவதினமான வியாழக்கிழமை (24) திகதி திடீர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

இதன்போது அரசாங்கம் அறிவித்த முட்டையின் விலை 50 ரூபாயாக இருந்தபோது அதனை மீறி வர்த்தகர் ஒருவர் 60 ரூபாய்க்கு முட்டை விற்பனை செய்து வந்த நிலையில் அவரை பிடித்ததுடன் அவருக்கு எதிராக உடனடியாக அன்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர்போல் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை அபதாரமாக ஒரு இலட்சம் ரூபாய் செலுத்துமாறு உத்தரவிட்டு தீர்ப்பளித்தர்;.

இதேவேளை முட்டையின் கட்டுப்பாட்டுவிலை 50 ரூபாயாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் மொத்த வியாபரிகளிடமிருந்து  58 ரூபாய்குத்தான் முட்டையை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதுடன் அதனை 60 ரூபாய்க்கு விற்கவேண்டியுள்ளதுடன் அதில் இலாபமாக 50 சதம் மட்டும் பெற்றுக் கொள்ள முடியும்.

இவ்வாறான நிலையில் வடிக்கையாளர்களுக்கு 60 ரூபாய்க்கு முட்டையை விற்கும் போது கட்டுப்பாட்டு விலையை மீறி கூடிய விலைக்கு முட்டையை விற்றதாக நுகர்வோர் அதிகாரசபை எமக்கு எதிராக வழக்கு தொடருகின்ற போது ஒரு முட்டைக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபதாரம் விதித்தால் என்ன செய்வது. எனவே முட்டை வியாபாரம் வேண்டாம் என முட்டை வியாபாரத்தில் ஈடுபட்ட பல வர்த்தகர்கள் முட்டை வியாபாரத்தை நிறுத்தியுள்ளனர். இதனால் முட்டைக்கு மாவட்டத்தில் பலத்த தட்டுபாடு நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X