Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2018 ஜூலை 04 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடியில் ஒரே இலக்கத்துடன் பதிவு செய்யப்படாமல் பாவித்து வந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டு, காத்தான்குடிப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றை வைத்திருந்த இருவர், இன்று (04) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
EP/BFA 2727 எனும் இலக்கத்தைப் பயன்படுத்திப் பாவித்து வந்த மோட்டார் சைக்கிள்களே, காத்தான்குடிப் பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்துப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்துக் கைப்பற்றப்பட்டுள்ளன.
காத்தான்குடி 6ஆம் குறிச்சியில் மேற்படி இலக்கத்தில் ஒரு மோட்டார் சைக்கிளொன்று பதிவு செய்யப்பட்டு, அதற்கான பதிவு, காப்புறுதிச் சான்றிதழ் பெறப்பட்டுள்ளன.
ஆனால், இதே இலக்கமுடைய மற்றைய மோட்டார் சைக்கிள் பதிவு செய்யப்படாமலும் காப்புறுதிச் சான்றிதழ் பெறப்படாமலும் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளுக்கான இலக்கத்தை வைத்து போலியான இலக்கத்தகட்டைத் தயாரித்து, கடந்த ஒரு வருட காலமாகப் பாவித்து வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக, காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மோட்டார் சைக்கிள் இரண்டையும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் பாவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago