Suganthini Ratnam / 2017 ஜனவரி 16 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.அஹமட் அனாம்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஒருவகை மாத்திரைகள் மற்றும் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் வியாபாரி ஒருவரையும் அவரது உதவியாளர் ஒருவரையும்; ஞாயிற்றுக்கிழமை (15) மாலை கைதுசெய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி பிரிவில் போதைவஸ்துப் பாவனையை ஒழிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிவில் உடையில் நடமாடிய பொலிஸார், மேற்படி இருவரையும் கைதுசெய்துள்ளதாகவும் இவர்களிடமிருந்து 930 மாத்திரைகளைக் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.
இம்மாத்திரைகளை சந்தேக நபர்கள் மறைத்து வைத்திருந்த நிலையிலேயே கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.
8 minute ago
37 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
37 minute ago
45 minute ago