2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கிவைப்பு

Kanagaraj   / 2015 டிசெம்பர் 12 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாலர்பாடசாலைகளுக்கு மினி ஒலிபெருக்கி சாதனங்கள் இன்று (12) சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண கல்வியமைச்சின் பாலர் பாடாசாலை பணியகத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தினால் இந்த மினி ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு டேர்பா மண்டபத்தில்  பாலர் பாடசாலை பணியகத்தின் தலைவர் பொன் செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.துரைராசிங்கம், கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்ணம், மட்டக்களப்பு வயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் உட்பட வலயக் கல்விப்பணிப்பாளர்கள், மண்முனை வடக்கு பிரதேச செயலாளார் ஏ.தவராஜா, மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் உட்பட அதிகாரிகள் பாலர் பாடசாலைகளின் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 71  பாலர்பாடசாலைகளுக்கு மினி ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கப்பட்டன.

 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .