Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 15 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஒல்லிக்குளம் கிராமத்தில் புதிய வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல், புதன்கிழமை (14) நாட்டப்பட்டது.
இவ்வீட்டுத் திட்டத்தில் 50 வீடுகள் கட்டப்படவுள்ளன. 10 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய ஒவ்வொரு வீடும் ஒரு வரவேற்பு அறை, 3 அறைகள், ஒரு சமையல் அறை, ஒரு குளியல் அறை ஆகியவற்றைக் கொண்டமையும்.
வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்ற மக்களுக்காக வேண்டி ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் அமைப்பின் அனுசரணையுடன் இவ்வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .