Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஓகஸ்ட் 11 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம், எச்.எம்.எம்.பர்ஸான், ஆர்.ஜெயஸ்ரீராம்
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எம்.நெளபர் ஏகமனதாக, இன்று (11) தெரிவுசெய்யப்பட்டார்.
பதில் தவிசாளர் யூ.எல்.அஹமட் லெப்பை தலைமையில், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
முன்னதாகத் தவிசாளராகப் பதவி புரிந்த ஐ.ரீ.அஸ்மி (அமிஸ்டீன்) தனது தவிசாளர் பதவியை, க ஜூலை மாதம் 20ஆம் திகதி இராஜினாமா செய்திருந்தார். அதன் வெற்றிடத்தை நிரப்புவதற்கே, புதிய தவிசாளர் தெரிவு நேற்று நடைபெற்றது.
18 உறுப்பினர்களைக் கொண்ட ஓட்டமாவடி பிரதேச சபையின் நேற்றைய அமர்வில், 13 உறுப்பினர்கள் மாத்திரமே கலந்துகொண்டு, புதிய தவிசாளரைத் தெரிவுசெய்தனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் 06 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 03 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி ஆகிய கட்சிகளின் தலா ஒவ்வோர் உறுப்பினர்களும் கலந்துகொண்டு, புதிய தவிசாளருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அதேவேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 05 உறுப்பினர்கள், சபைக்கு சமூகமளிக்கவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago