2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ஓய்வூதியம் கிடைக்காதோருக்கு ரூ.25 ஆயிரம் முற்பணம்

Editorial   / 2020 ஏப்ரல் 07 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம், பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பில் அரச பணியிலிருந்து அண்மையில் இளைப்பாறி, ஓய்வூதியம் கிடைக்காமல் காத்திருப்போருக்கு அரச சுற்றறிக்கைக்கமைய ஏப்ரல், மே மாதங்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய்  முற்பணம் உடனடியாக வழங்குமாறு, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா, அரச திணைக்களத் தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

பொதுநிர்வாக அமைச்சு அண்மையில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டவாறு, அரச பணியிலிருந்து அண்மையில் இளைப்பாறி இதுவரையில் ஓய்வூதியம் கிடைக்காமல் காத்திருப்போருக்கு, தற்போதைய நிலைமை வழமைக்குத் திரும்பி செயல்படும்வரை ஏப்ரல், மே மாதங்களுக்கு  தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் 50 ஆயிரம் ரூபாய் முற்பணம் உடனடியாக வழங்குமாறு, ஓய்வூதியத் திணைக்களம் உட்பட சகல அரச திணைக்களத் தலைவர்களையும் அவர் கேட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X