2025 மே 02, வெள்ளிக்கிழமை

கசிப்புடன் பெண் ஒருவர் கைது

Freelancer   / 2023 ஜூன் 13 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

காத்தான்குடி - ஆரையம்தி பகுதியில் சட்டவிரோத கசிப்பு விற்பனை நிலையத்தை இன்று   முற்றுகையிட்ட பொலிஸார், கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை கைது செய்ததுடன் 86 போத்தல் கொண்ட 63,500 மில்லிலீற்றர் கசிப்பை மீட்டுள்ளனர்

மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து இன்று பகல் மாவட்ட புலனாய்வு பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து ஆரையம்பதி சிகரம் பிரதேசத்திலுள்ள கசிப்பு விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதன்போது கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட 49 வயதுடைய பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X