Janu / 2025 ஜூன் 24 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது கசிப்பு போதைப்பொருளுடன் 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணிப்புரையின் கீழ் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி ,தாழங்குடா, புதுக் குடியிருப்பு, நாவற்குடா, கல்லடி,கிரான்குளம் உட்பட பல இடங்களில் உள்ள கசப்பு தயாரிப்பு நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
ரீ.எல்.ஜவ்பர்கான்

27 minute ago
57 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
57 minute ago
1 hours ago
2 hours ago