2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2017 ஓகஸ்ட் 15 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு, கொக்கடிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சதுர்ப்பு நில வாவியின் அருகே, அடர்ந்த காட்டுப் பகுதியில் நீண்ட காலமாக  நடத்தப்பட்டு வந்த சகிப்பு உற்பத்தி நிலையம், மதுவரித் திணைக்கள அதிகாரிகளால், நேற்றிரவு முற்றுகையிடப்பட்டது.

மதுவரித் திணைக்கள மாவட்ட அத்தியட்சகர் நடராஜா சுசாதரன் தலைமையில் இடம்பெற்ற திடீர் சுற்றிவளைப்பில்,  சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரெனவும் மூவர் தப்பியோடிவிட்டனரெனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்போது, 450 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டு, அதே இடத்திலேயே அழிக்கப்பட்டதுடன், 28 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டதாகவும் அத்தியட்சகர் நடராஜா சுசாதரன் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்ட நபர் மற்றும் சகிப்பு உட்பட கைப்பற்றப்பட்ட பொருட்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .