Princiya Dixci / 2021 ஜூன் 14 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா
போதைப்பொருள் கடத்தல், விற்பனை, உற்பத்தியைத் தடுக்கும் வகையில், மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்களத்தால் தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கடந்த மூன்று தினங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தின் , களுவன்கேணி, கருவப்பங்கேணி மற்றும் குளத்தூர் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 06 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்புஸ்குடா பகுதியிலுள்ள காட்டுப் பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையமொன்றும் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது, 5 பரல்களில் இருந்து 4 இலட்சத்து 30,000 மில்லி லீற்றர் கசிப்பு உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் கோடா கைப்பற்றப்பட்டு, அழிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரி அத்தியட்சகர் எஸ்.ரஞ்சன் தெரிவித்தார்.
12 minute ago
28 minute ago
31 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
28 minute ago
31 minute ago
51 minute ago