Princiya Dixci / 2021 மார்ச் 15 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு, கல்லடி கடற்படை முகாமில் 5 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பிசிஆர் பரிசோதனை முன்னெடுத்துவரும் நிலையில், கல்லடி கடற்படை முகாமைச் சேர்ந்த குறித்த 5 வீரர்களுக்கும் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் நேற்று (14) அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 812 கொரோனா வைரஸ் தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், 8 மரணங்கள் இடம்பெற்றுள்ளதுடன், 731 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதுடன், 73 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
8 hours ago
8 hours ago
9 hours ago
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago
26 Apr 2026