Princiya Dixci / 2022 செப்டெம்பர் 12 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம் நூர்தீன்
காத்தான்குடி கடற்கரையில் ஏற்பட்டுள்ள கடலரிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
கரையோரம் பேணல் திணைக்களம், காத்தான்குடி பிரதேச செயலகம் என்பவற்றுடன், காத்தான்குடி நகர சபையும் இணைந்து, இந்தக் கடல் அரிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.
கரையோரம் பேணல் திணைக்கள அதிகாரிகள், நேற்று (11) இங்கு வருகை தந்து, மண் மமூடைகளை கட்டி கரையோரம் இட்டு, அங்குள்ள கட்டடங்களை பாதுகாக்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன் போது காத்தான்குடி நகர சபை தவிசாளர் அஸ்பர் களத்தில் நின்று வேலைகளை துரிதப்படுத்தினார்.
காத்தான்குடி கடற்கரையில் கடலரிப்புக் காரணமாக அப்பகுதி மீனவர்கள் மற்றும் கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக இங்கு கடலரிப்பு ஏற்பட்டு வருவதுடன், காத்தான்குடி கடற்கரையின் ஏத்துக்கால் பகுதியிலேயே கடலரிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது.
இந்தக் கலரிப்புக்காரணமாக மீன்பிடிப் படகுகளை கடலுக்கு கொண்டு செல்வதிலும் மீனவர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர்.
26 minute ago
33 minute ago
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
33 minute ago
44 minute ago
1 hours ago