Suganthini Ratnam / 2016 ஜூன் 29 , மு.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பூநொச்சிமுனைப் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 03 பிள்ளைகளின் தந்தையான எம்.பதூர்தீன் (வயது 38) என்ற மீனவர் படகிலிருந்து தவறி விழுந்து காணாமல் போயுள்ளார்.
ஏனைய இரண்டு மீனவர்களுடன் இவர் பூநொச்சிமுனைக் கடலுக்கு செவ்வாய்க்கிழமை (29) பிற்பகல் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். இம்மீனவர்கள் மூன்று பேரும் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, படகிலிருந்து குறித்த மீனவர் தவறி விழுந்துள்ளார்.
தங்களுடன் சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்தமை தொடர்பில் பொலிஸாரிடமும் அவரது குடும்பத்துக்கும் கரை திரும்பிய ஏனைய இரண்டு மீனவர்களும் தெரியப்படுத்தினர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு குறித்த மீனவரின் உறவினர்கள் தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, கடற்படையினரின் உதவியுடன் குறித்த மீனவரைத் தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025