2025 மே 23, வெள்ளிக்கிழமை

கடைக்குள் புகுந்த ட்ரக்

கே.எல்.ரி.யுதாஜித்   / 2017 செப்டெம்பர் 06 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு -  கல்முனை நெடுஞ்சாலை பிரதான வீதியில் அமைந்துள்ள கடையொன்றின் 9 தூண்களையும் கடைச்சுவரையும் உடைத்துக்கொண்டு, நேற்று (05) அதிகாலை 2.15 மணியளவில் சிறிய ட்ரக் ஒன்று உட்புகுந்துள்ளதாக, களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி ஆர்.எம் ரத்நாயக்க தெரிவித்தார்.

இவ்விபத்து, களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாகவே இடம்பெற்றுள்ளதாகவும் சாரதியின் நித்திரைத் தூக்கமே இதற்குகக் காரணமெனவும் அவர் தெரிவித்தார்.

கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான குறித்த ட்ரக், கோழி இளைச்சிகளைக் கொள்வனவு செய்வதற்காக, கல்முனையில் இருந்து புறப்பட்டு, கல்முனை-மட்டக்களப்பு நெடுஞ்சாலை வழியூடாக ஏறாவூரை நோக்கிப் பயணிக்கும் போதே, இவ்விபத்துக்கு முகங்கொடுத்துள்ளது.

குறித்த விபத்தால், களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த தனியார் ஒருவருக்குச் சொந்தமான தகவல் பரிமாற்றல் கடைக்குப் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தின் போது, ட்ரக்கில் பயணித்த இருவரும் உயிர் தப்பியுள்ளனர் என்பதுடன், ட்ரக்கின் முன்பகுதிக்குப் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

மேலும், தகவல் பரிமாற்றக்கடையில் இருந்த குளிரூட்டி (எயார்கண்டிசன்), போட்டோ பிரதி இயந்திரம், மின்மானி, கண்ணாடிகள், கடையில் உள்ள பொருட்கள் உட்பட பல பொருட்கள் சேதமடைந்துள்ளவெனவும் இவற்றின் பெறுமதி ஆறு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் எனவும் கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.

கடைக்குள்ளிருந்து வாகனத்தை மீட்டெடுத்த களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார், இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X