ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி நகரசபைப் பிரிவில், கவனிப்பாரின்றி அலைந்து திரியும் கட்டாக்காலிகளைக் கட்டுப்படுத்தும் திட்டம், உடனடியாக அமுலுக்கு வருவதாக, நகரசபைத் தலைவர் எஸ்.எச். முஹம்மத் அஸ்பர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் இன்று (19) விடுத்துள்ள பொது அறிவித்தலில், இன்று (20) முதல், காத்தான்குடி நகரசபைப் பிரிவின் எந்தவொரு இடத்திலும், உரிமையாளர்கள் அல்லது வளர்ப்போரின் பராமரிப்பின்றி அலைந்து திரியும் ஆடுகள், மாடுகள், நாய்கள் அனைதையும், நகரசபை ஊழியர்கள் கைப்பற்றுவார்களென, அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, நகர சபையில் எடுக்கப்பட்ட ஒத்திசைவான தீர்மானத்தின் அடிப்படையில், இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
பிரதேசப் பொதுமக்கள், பாடசாலை நிர்வாகம், வாகன ஓட்டுநர்கள், பயணிகள், வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய பல தரப்பினரிடமிருந்தும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கும் ஆலோசனைகளுக்கும் அமைவாகவே, கட்டாக்காலிகளைக் கைப்பற்றி, அவற்றுக்கு அபராதம் விதிக்கும் திட்டம் அமுலாவதாக, அவர் மேலும் கூறினார்.
நகர சபையால் கைப்பற்றப்படும் கட்டாக்காலிகளுக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதோடு, மூன்று நாட்களுக்குள் அந்தக் கட்டாக்காலிகள் எவராலும் உரிமை கோரப்படாதவிடத்து, அவை நகரசபைக்கு உரித்தாக்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025