Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
எம்.எம்.அஹமட் அனாம் / 2018 மார்ச் 19 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில், அரசாங்கம் சில நாட்களாக பாராமுகமாக இருந்தமை கவலைக்குரிய விடயமென, கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஆனால், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அழுத்தங்களின் பின்னர், விசாரணை இடம்பெற்றது எனவும் அவர் தெரிவித்தார்.
கிராமியப் பொருளாதார அமைச்சின் நிதியொதுக்கீட்டின் மூலம், தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, ஒட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய மண்டபத்தில் நேற்று (18) மாலை இடம்பெற்ற போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “கண்டிப் பிரச்சினை தொடர்பில், நாடாளுமன்றத் திண்னையில் அமர்ந்திருந்து, எமது சமூகத்தைக் காப்பாற்றச் சண்டை போட்டோம். இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லிம் அரசியல்வாதிகள், நாடாளுமன்றத் திண்னையில் அமர்ந்திருந்து குரல் இட்ட நாட்கள், இந்த தடவையாகத்தான் இருக்கும்
“இலங்கையில் தற்போது ஏற்பட்ட பிரச்சினை, மற்றைய மாவட்டங்களிலும் இடம்பெறக் கூடாது என்பதற்காக, இந்தப் போராட்டத்தை மேற்கொண்டோம். சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி இருந்தால், இந்தப் பிரச்சனை இவ்வாறு ஏற்பட்டிருக்காது. இந்த நிகழ்வு, இலங்கை நாட்டுக்கு, சர்வதேச மட்டத்தில் அபகீர்த்தியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது" என்று குறிப்பிட்டார்.
அம்பாறையிலும் கண்டியிலும் இடம்பெற்ற வன்முறைகள், இந்நாட்டில் மீண்டுமோர் இன முறுகலை எதிர்காலத்தில் ஏற்படுத்தக் கூடாது என்ற மனநிலை, முஸ்லிம்களிடத்தில் இருக்க வேண்டுமெனக் குறிப்பிட்ட அவர், பெரும்பான்மைச் சமூகத்தினரிடம் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற உணர்வுடன் பழக வேண்டுமெனவும் தெரிவித்ததோடு, "இதனை மீறினால், எதிர்காலத்தில் எமது சமூகத்துக்குப் பாரிய பிரச்சினையை ஏற்படுத்தலாம்” என்றும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago