2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

கண்காட்சி

Suganthini Ratnam   / 2016 மே 18 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

'கிழக்கின் மாபெரும் வர்த்தகக் கண்காட்சி' எதிர்வரும் 27ஆம், 28ஆம், 29ஆம் திகதிகளில் பிற்பகல் இரண்டு மணி முதல் இரவு 10 மணிவரை கல்லடி சிவானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த வர்த்தகப் பிரமுகர்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தும் நோக்கில் இக்கண்காட்சி நடத்தப்படவுள்ளது. இங்கு வியாபார நடவடிக்கைகளும் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 150 க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் காட்சிக்கூடங்கள், சங்கீத மேடை, பிரத்தியேக கல்வி வளாகம் என்பன அமைக்கப்படவுள்ளன.

தொலைத்தொடர்பு, விவசாயம், வேகமாக நகரும் நுகர்வுப்பொருட்கள், மருத்துவம், சுகாதாரம், போக்குவரத்து, சுற்றுலா, தன்னியக்க வண்டி, கட்டுமானம், மின்சக்தி உற்பத்தி, நிதி மற்றும் வங்கி, கல்வி உள்ளிட்டவை தொடர்பான காட்சிக்கூடங்கள் அமைக்கப்படவுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X