2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கண்ணாடிப் போத்தலில் பிள்ளையார் உருவம்

Princiya Dixci   / 2016 நவம்பர் 15 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம், நல்லதம்பி நித்தியானந்தன்

மட்டக்களப்பு, வாழைச்சேனை - சுங்காங்கேணி கிராமத்தைச் சேர்ந்த க.யோகராணி என்பவரின் வீட்டின் சுவாமி அறையில் வைக்கப்பட்ட கண்ணாடி போத்தலொன்று, பிள்ளையார் உருவமாக மாறிய அற்புத நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

இது பற்றி க.யோகராணி குறிப்பிடுகையில் தெரிவிக்கையில்,

கடந்த 27 வருடங்களாக கேராத கௌரீஸ்வரர் விரதம் அனுஷ்டித்து வருகின்றேன். ஒவ்வொரு வருடமும் கௌரி விரதம் முடிந்ததும் ஆலயத்தில் விரதத்துக்கான கௌரி விரத காப்பு வழங்குவது வழமை. அந்தவகையில் பழைய காப்பை இந்தக் கண்ணாடிப் போத்தலில் போட்டு விட்டு, புதிய கௌரி காப்பை கட்டுவது வழமை. கடந்த 27 வருடமாக இதைத்தன் செய்து வருகின்றேன். பழைய கௌரி காப்பு அனைத்தையும் நான் 27 வருடமாக வைத்துப் பாதுகாத்து வரும் இந்தக் கண்ணாடிப் போத்தலை, சுவாமி அறையில் வைத்து வழிபடுவேன்.

இந்த வருடத்துக்கான கௌரி காப்புப் பெட்டி, கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி அன்று, ஆலயத்தில் வழங்கினர்கள். அதனை வீட்டிற்குக் கொண்டு வந்து சுவாமி அறையில் வைத்து வணங்கும்போது ஒரு பெரிய வெளிச்சம் போத்தலினுள் வந்து விழுந்தது. அப்போது கண்ணாடிப் போத்தலைப் பார்த்தால் பிள்ளையார் உருவமாக மாறியுள்ளது.

குறித்த விடயத்தை யாரிடம் சொல்வது எனத் தெரியாமல் பல நாட்களுக்குப் பிறகு பூசகர் ஒருவரிடம் இச்சம்பவம் தொடர்பாகத் தெரியப்படுத்தியதும், 'பிள்ளையார் அருள் கிடைத்திருக்கின்றது. வைத்து வழிபடுங்கள்' எனப் பூசகர் தெரிவித்ததையடுத்து, அதனை வணங்கிவருகின்றேன்.

எனது மகன், 8 வயது வரை பேச்சுத்திறன் அற்று இருந்தான். அதனால், மட்டக்களப்பு களுதாவளைப் பிள்ளையார் ஆலயத்துக்குச் சென்று நேர்த்தி செய்து 3 நாட்களில் என் மகன் பேச வேண்டும் என வழிபட்டு வந்தேன். அதுபோலவே சரியாக 3ஆவது நாளில் அம்மா எனக் கதைத்தார். அதனால் நான் பிள்ளையாரில் அதிக பக்தி கொண்டு வழிபட்டு வருகின்றேன்' என்றார்.

இந்தக் கண்ணாடிப் போத்தல் பிள்ளையாரை வணங்க, நாள்தோறும் அதிகளவினான பக்தர்கள் க.யோகராணி வீட்டினை நோக்கிப் படையெடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X