Editorial / 2017 டிசெம்பர் 27 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, வடிவேல் சக்திவேல், க.விஜயரெத்தினம்
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியிலுள்ள தேவாலய வளாகத்துக்குள், நேற்றிரவு (26) 7 மணியளவில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திப் படுகொலைசெய்யப்பட்டுள்ளார் என, களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
பெரியகல்லாறு ஊர் வீதியிலுள்ள புனித அருளானந்தர் தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது, இருவருக்கு இடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கமே கத்திக்குத்துச் சம்பவத்துக்கு காரணம் எனவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, பெரியகல்லாறு முதலாம் குறிச்சி பிரதான வீதியைச் சேர்ந்த ஜேசுதாசன் திமேசன் (23 வயது) என்னும் இளைஞரே உயிரிழந்துள்ளரென, களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவரும் சந்தேகநபரின் தந்தையும் சரணடைந்துள்ளனரெனவும் சடலம், பெரியகல்லாறு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மரண விசாரணையை தொடர்ந்து சடலம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன், இது தொடர்பான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
15 Nov 2025
15 Nov 2025
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Nov 2025
15 Nov 2025
15 Nov 2025