Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
புதிய அரசியலமைப்பில் முஸ்லிம்களின் நிலைப்பாடு எவ்வாறு அமைய வேண்டுமென்பதை அறிவதற்காக அது தொடர்பான கருத்தரங்கு, காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள அகமது லெவ்வை ஞாபகார்த்த மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணி முதல் மாலை 4.30 மணிவரை நடைபெறவுள்ளது.
காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இக்கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
இது தொடர்பான விளக்கமளிக்கும் ஊடகவியாளர் சந்திப்பு, சம்மேளன மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் முக்கியஸ்தர் எம்.ஐ.உசனார் தெரிவிக்கையில், 'எமது நாட்டில் அறிமுகப்படுத்த உத்தேசிக்கப்படும் புதிய அரசியலமைப்புத் தொடர்பில்; முஸ்லிம்களின் நிலைப்பாடு எவ்வாறு அமைய வேண்டுமென்பதை ஆராய்ந்து, அதன் தீர்மானத்தை நியமிக்கப்பட்டுள்ள அரசியல் யாப்புச் சபைக்கு கையளிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்காக, இக்கருத்தரங்கை நடத்தவுள்ளோம்' என்றார்.
இதில் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான், சட்டத்தரணி எம்.ஹக்கீம் உட்பட சட்டத்தரணிகள், அரசியல் பிரமுகர்கள், சமூகநல ஆர்;வலர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago
2 hours ago