Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 17 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.எல்.ஜவ்பாகான், கே.எல்.ரி.யுதாஜித், எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆரையம்பதி கர்பலாக் கடலில் ஞாயிற்றுக்கிழமை (16) மாலை நீராடிக்கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கிக் காணாமல் போன மாணவனின் சடலம் இன்று (17) மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். ;
ஆரையம்பதி -3, பழைய கல்முனையைச் சேர்ந்த கனகலிங்கம் நர்மதன் (வயது 17) என்ற மாணவன், தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுடன் கடலில் நீராடியுள்ளான். அப்போது திடீரென்று இம்மாணவன் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இம்மாணவனைத் தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுவந்த நிலையில், இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் 7 ஏ மற்றும் 2 பி பெறுபேற்றை இம்மாணவன் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
2 hours ago