Sudharshini / 2015 நவம்பர் 28 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
தென்னை மரங்களை நாசம் செய்யும் கருவண்டு மற்றும் செவ்வண்டுகளை அழிக்க இயற்கை முறையிலமைந்த உயிரியல் செயற்றிட்டத்தை முதன் முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடங்கியுள்ளதாக தென்னை அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எம்.கமால் சப்ரி தெரிவித்தார்.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட தெங்குச் செய்கையாளர்களுக்கு ஆயிரம் வண்டுப் பொறி வாளிகளும் வண்டுகளைக் கவர்ந்திழுத்து பொறியிலகப்படுத்தும் 'பெரமோன்' எனப்படும் வாசனைத் திரவமும் 500 பேருக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
பரீட்சிக்கப்பட்டு வெற்றியளிக்கப்பட்டுள்ள இந்த இயற்கை உயிரியல் வண்டுக் கொல்லி முறையினால், அழிந்து வரும் தென்னை மரங்களை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும் என தென்னை அபிவிருத்தி உத்தியோகஸ்தர் தெரிவித்தார்.
'றின்கோபொறஸ் பெருஜினியஸ்' எனும் விஞ்ஞான உயிரியல் பெயரால் அழைக்கப்படும் செவ்வண்டுகள், தென்னைச் செய்கைக்கு பாரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துவதனால், அதனை இயற்கை உயிரியல் முறையில் அழிப்பதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்தார்.
கருவண்டு அல்லது செவ்வண்டினால் தாக்கப்பட்ட தென்னை மரங்களை இரண்டாகப் பிளந்து மரத்தை எரித்து விட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அந்த மரத்திலிருந்து உற்பத்தியாகும் வண்டுகள் பிராந்தியத்திலுள்ள தென்னை மரங்களையே ஒட்டு மொத்தமாக அழித்து விடும் ஆபத்து உண்டு என அவர் தெங்குச் செய்கையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட தென்னை பயிர்ச்; செய்கைச் சபையின் பிராந்திய முகாமையாளர் பிறேமினி ரவிராஜ், கோறளைப் பற்று மத்தி பிரதேச செயலாளர் வி. நிஹாறா மௌஜுத், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ. றியாஸ், தென்னை அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எம். கமால் சப்ரி உட்பட பல அதிகாரிகளும் 500 இற்கு மேற்பட்ட தெங்குச் செய்கையாளர்களும் கலந்துகொண்டனர்.
26 minute ago
31 minute ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
31 minute ago
6 hours ago
7 hours ago