Sudharshini / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
சமூக பொருளாதார அபிவிருத்தியும் பாதுகாப்பற்ற புலம் பெயர்;தலை மட்டுப்படுத்தலும் எனும் கருத்திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிலுள்ள பெண்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்றுவது குறித்து கலந்துரையாடல் ஒன்று நேற்று (23) நடைபெற்றது.
அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அம்கோர்; நிறுவனத்தின் ஏற்பாட்டில்; அம்கோர்; நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட திட்ட முகாமையாளர் ச.சக்தீஸ்வரன் தலைமையில் துறைநீலாவணை விபுலானந்தர்; வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இதில், துறைநீலாவணை தெற்கு கிராம சேவகர்; பிரிவுக்குட்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்றுவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் துறைநீலாவணை தெற்கு ஒன்று கிராம சேவகர் தி.கோகுலராஜ் மற்றும் அம்கோர்; நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர்கள், பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
31 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
7 hours ago