Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு கல்வியியல் கல்லூரிகளில் பயிற்சி பெற்றவர்களை நியமிப்பதற்கு முன்னெடுக்கும் நடவடிக்கையை மீள்பரிசீலனை செய்யுமாறு மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் வேண்டுகோள் விடுத்து கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை (02) அச்சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு கல்வியியல் கல்லூரிகளில் பயிற்சி பெற்றவர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இம்மாகாணத்திலுள்ள பட்டதாரிகளை இணைக்கும் சந்தர்ப்பம் பாதிக்கப்படும்.
உயர்தரத்தில் அதிகூடிய வெட்டுப்புள்ளிகளைப் பெற்று பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற 3,500 பேர், வேலைவாய்ப்பின்றி கிழக்கு மாகாணத்தில் உள்ளனர்.
ஏனைய மாகாணங்களில் கல்விமானிப் பட்டம் பெற்றவர்களுக்கு பரீட்சையின்றி, போட்டியின்றி ஆசிரியர் நியமனம் வழங்கப்படுகின்றது. ஆனால், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்விமானிப் பட்டம் பெற்றவர்களுக்கு இச்சலுகை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கல்வியியல் கல்லூரிக்கு தெரிவுசெய்யப்படுபவர்கள் நாட்டின் எப்பாகத்திலும் கடமையாற்ற உடன்பட்டவர்கள். எனவே, கிழக்கு மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இவர்களைக் கொண்டு நிரப்பப்படுமாயின், இங்குள்ள பட்டதாரிகளின் நிலைமை தொடர்பிலும் தாங்கள் விசேட கவனம் செலுத்த வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
55 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
7 hours ago