Suganthini Ratnam / 2016 மே 09 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,ஏ.எச்.ஏ.ஹுஸைன்
யுத்த சூழலில் பாதிக்கப்பட்டு பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் கல்வி கற்ற தாம், உரிய தகுதி இருந்தும் கல்வியியல் கல்லூரி நியமனத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயத்துக்குட்பட்ட இளைஞர், யுவதிகள் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.
வவுணதீவு, குறிஞ்சாமுனைச் சந்தியிலிருந்து ஆரம்பமாகிய பேரணி, மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயம் வரை சென்று அங்கு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இது தொடர்பில் ஆர்;ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில், '2013ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய நாம், சித்தி பெற்று அதன் ஊடாக தேசிய கல்வியியல் கல்லூரிக்கு விண்ணப்பித்து நேர்முகப் பரீட்சைக்கும் தோற்றினோம். ஆனால், மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயத்திலிருந்து ஒரு மாணவர் கூட தேசிய கல்வியியல் கல்லூரிக்குத் தெரிவு செய்யப்படவில்லை' என்றனர்.
'இந்நிலையில், தேசிய கல்வியியல் கல்லூரி மற்றும் கல்வி அமைச்சிடம் எமக்கு நியாயம் வழங்குமாறு கோரியதாகவும் இதன்போது, மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயத்திலிருந்து தங்களுக்கு ஆசிரிய வெற்றிடத் தேவை தொடர்பான தகவல் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலய அதிகாரிகளிடம் கோரியபோது, ஆசிரிய வெற்றிடத் தேவை தொடர்பான தகவல்; அனுப்பப்பட்டுள்ளதாக அவ்வலய அதிகாரிகள் கூறினர்' என்றனர்.
'நேர்முகப் பரீட்சையில் நாம் தெரிவு செய்யப்பட்ட போதிலும், ஆசிரிய வெற்றிடத் தேவை தொடர்பான தகவலைக் காரணம் காட்டி எமக்கான ஆசிரிய மாணவர் நியமனங்களை வழங்குவதற்கு மறுப்புத் தெரிவிக்கப்படுகின்றது' எனவும் அவர்கள் கூறினர்.
'எனவே, எமது இந்தப் பிரச்சினை தொடர்பில் உரிய அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தலையிட்டு எமக்கு உரிய தீர்வைப் பெற்றுத்தர வேண்டும்' எனவும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், ஆர்ப்பாட்ட இடத்துக்கு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் கலந்துரையாடினார். இதன்போது, குறித்த மாணவர்களின் பிரச்சினை தொடர்பில் கல்வி அமைச்சர் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுசென்று தீர்வைப் பெற்றுத் தருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.


3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago