Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மாவட்டத்துக்கான களப்பு மீனவர் ஒன்றிணைந்த நல்லாட்சி குழு, நேற்று(15) ஏற்படுத்தப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்துக்கான களப்பு மீனவர் ஒன்றிணைந்த நல்லாட்சி குழுவின் கூட்டம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன்போதே மேற்படி குழு அமைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், கிழக்கு மாகாண மீன்பிடித்திணைக்களப் பணிப்பாளர் எஸ்.சுதாகரன், கடற்;றொழில் நீரியல் வளங்கள் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ருக்சான் குருஸ், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பார்ம் பவுண்டேசன் நிறுவனத்தின் பணிப்பாளர் சுனில் தும்பேபொல உட்பட பலர் கலந்துகொண்டனர்.
களப்பு மீனவர் ஒன்றிணைந்த நல்லாட்சி குழுவில், மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர், பிரதேச சபையினர், நகர அபிவிருத்தி அதிகார சபைப் பிரதிநிதி, கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களப் பணிப்பாளர், கரையோரம் பேணல் திணைக்களத்தின் பிரதிநிதி மத்திய சூழல் அதிகாரசபையின் அதிகாரி உள்ளிட்ட அனைத்துத் திணைக்களங்களின் சார்பிலான உத்தியோகத்தர்களும் களப்பு மீனவர்களின் முகாமைத்துவக் குழுக்களின் பிரதிநிதிகளும் உள்ளடங்குவர்.
இக்குழுவின் தலைவராக மாவட்ட அரசாங்க அதிபரும் செயலாளராக கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளரும் செயற்படுவார்கள்.
கடற்றொழில் நீரியல் வளங்கள் சட்டம் 2013ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க, கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின்படி இந்த களப்பு மீனவர் ஒன்றிணைந்த நல்லாட்சி குழுவானது அமைக்கப்பட்டுள்ளது.
களப்பு வளங்களைப் பாதுகாத்து, வளப்படுத்திப் பராமரித்து முகாமைத்துவம் செய்வதுடன், மீனவர்களின் வாழ்வாதாரததையும் மேம்படுத்துவதற்கான வேலைகளில் இந்த களப்பு மீனவர் ஒன்றிணைந்த நல்லாட்சி குழு ஈடுபடும்.
எதிர்வரும் காலத்தில் களப்பு தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகளைக் கலந்துரையாடி சட்டப்படியான தாபன முறைப்படுத்தப்பட்ட முறையிமையை ஏற்படுத்தும் வேலைகளில் இக்குழு ஈடுபடும்.
மாவட்ட செலயகம் மற்றும் கடற்;றொழில் நீரியல் வளத் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து பிரக்ரிகல் அக்சன், பார்ம் பவுண்டேசன் ஆகியன நிலையான களப்புகள் மற்றும் வாழ்வாதாரத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான களப்பு மீனவர் ஒன்றிணைந்த நல்லாட்சி குழு அமைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago