Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Princiya Dixci / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு, கல்லடியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில், கொவிட் 19 தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி, களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட 39 பேரில் 25 பேருக்கு தலா 5,000 ரூபாய் வீதம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டதுடன், மேலும் 14 பேருக்கு பிடியாணை பிறப்பிக்கப்புட்டுள்ளது.
கடந்தாண்டு டிசெம்பர் மாதம் 15ஆம் திகதி, மேற்படி சுற்றுலா விடுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி களியாட்ட நிகழ்வை நடத்தியவர்கள் மீது, நீதிமன்ற அனுமதியின் பேரில், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சீ.றிஸ்வான் முன்னலையில் இன்று (09) எடுத்துக்கொள்ளப்பட்டபோது, 25 பேருக்கு தலா 5000 ரூபாய் அபராதம் விதித்துடன், மன்றில ஆஜராகத் தவறிய 14 பேருக்கும் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான ரி.மிதுன்ராஜ், எஸ்.அமிர்தாப் ஆகியோர் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
27 minute ago
51 minute ago
54 minute ago