2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டடத் திறப்பு விழா

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 11 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, வடிவேல் சக்திவேல்

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை வளாகத்தில் 514 மில்லியன் ரூபாய் செலவில் புதிய கட்டடத்தை திறந்துவைக்கும் நிகழ்வு, எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி நடைபெறவுள்ளது.

சத்திரசிகிச்சைக் கூடம், அவசர சிகிச்சைப் பிரிவு, ஆய்வுகூடம், தொற்று நீக்கிப் பிரிவு, சிறுபிள்ளை விடுதி, மகப்பேற்று விடுதி, நோயாளர் விடுதிகள் ஆகியவற்றைக் கொண்டதாக புதிய கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. இப்புதிய கட்டடமானது. ஜனாதிபதியின் பங்குபற்றுதலுடன்  திறந்து வைக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஏ.முருகானந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஆராயும் வகையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு   செவ்வாய்க்கிழமை (10)  ஜனாதிபதி செயலகத்தின் உதவி சிரேஷ்ட செயலாளர் தலைமையிலான குழுவினர் வருகை தந்திருந்தனர்.

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு அதற்கான பாதுகாப்பு ஏற்பாடு  மற்றும் ஏனைய  நடைமுறை  தொடர்பிலும் இக்குழுவினர் ஆராய்ந்தனர்.

மேலும்,  இவ்வைத்தியசாலையில்; 80 பேருக்கான ஆளணிப் பற்றாக்குறை காணப்படுவதாகவும் அவ்வைத்தியசாலையின் நலம்புரிச் சங்கம் தெரிவித்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X