2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

கவனயீர்ப்புப் போராட்டம்

Suganthini Ratnam   / 2016 மே 31 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,வடிவேல் சக்திவேல்

ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 12ஆவது நினைவுதினத்தையொட்டி காந்தி பூங்கா முன்றலில் நாளை புதன்கிழமை காலை ஒன்பது மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.

ஊடகவியலாளர் ஐ.நடேசனின் படுகொலை விசாரணையை மீள ஆரம்பிக்குமாறு கோரியும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரியும் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.  

இதில் அனைத்து ஊடகவியலாளர்களையும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களையும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அரசியல் பிரதிநிதிகளையும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் கலந்துகொண்டு வலுச்சேர்க்குமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X