Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
காடு வளர்ப்புத் திட்டத்தை தூர நோக்குடன், சிறந்த திட்டமிடலின் கீழ், அமுல்படுத்துவது மிகவும் வரவேற்கத்தக்கதாகுமென, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந் தெரிவித்தார்.
நாங்கள் எதிர்நோக்குகின்ற பஞ்சத்தையும் வரட்சியையும் குறைப்பதற்காக வேண்டி, இடப்பற்றாக்குறை நிறைந்த பிரதேசத்தில், மியோவாக்கி முறையிலான காடு வளர்ப்புத் திட்டம் மேற்கொள்ளப்படுவதைப் பாராட்டிய அவர், இயற்கையின் சமநிலையைப் பேணுகின்ற காடுகளைப் பாதுகாப்போம் என்றார்.
மியோவாக்கி முறையில் காடு வளர்ப்புத் திட்டமொன்று, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட களுவாஞ்சிகுடி வடக்கு முதலாம் பிரிவில், இன்று (01) நடைபெற்றது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்திலம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மரங்களை நட்டு வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
8 hours ago
8 hours ago